தேவதானப்பட்டி அருகே ஆடு மேய்க்கும் கூலித் தொழிலாளியின் மகனான ஜீவித் குமார் நீட் தேர்வில் இந்திய அரசு பள்ளி அளவில் 664/720 மதிப்பெண்கள் பெற்று தமிழக அளவில் முதலிடம்
தேவதானப்பட்டி, அக்.17- தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே எ.வாடிப்பட்டியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி மகேஸ்வரி தம்பதியரின் மூத்த மகனாக பிறந்தவர் ஜீவித் குமார் இவருடன் பிறந்த ஷர்மிளா தேவி என்ற சகோதரியும் தீபன் என்ற சகோதரனும் உள்ளனர் இந்நிலையில் பெரியகுளம் அருகே உள்ள சில்வர்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஒர் ஆண்டு முன்பு பன்னிரெண்டாம் வகுப்பு பயின்ற மாணவன்.நீட் தேர்வு எழுதி உள்ளார் அப்போது அவர் பெற்ற மதிப்பெண் 198 மட்டுமே இந்நிலையில் ஆசிரியர்களின் ஒத்துளைப்போடு பெண் விடுதலைக் கட்சியின் நிறுவனத் தலைவர் சபரிமாலா அவர்களின் வழிகாட்டுதலின் படி தனியார் நாமக்கல் எஸ்.ஆர்.வி பயிற்சி வகுப்பில் பயிற்சி பெற்று தற்போது கடந்த செப்டம்பர் மாதம் நடந்த நீட் தேர்வில் 664-/720 மதிப்பெண்கள் பெற்றுளார் அவரது விடாமுயற்சியால் ஆசிரியரின் உதவியுடன் இந்தாண்டு ஜீவித் குமார் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் 664 ஆக இருப்பதால் தமிழகத்தில் அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களில் முதல் மாணவனாகவும் இந்திய அளவில் தரவரிசைப் பட்டியலில் 1823 வது இடம்பிடித்தார். தமிழகத்தில் தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே ஒரு சிறு கிராமத்தில் பிறந்து இந்திய அளவில் மதிப்பெண் பட்டியலில் இடம் பிடித்து தமிழகத்தில் முதல் மாணவனாக வந்த ஜீவித் குமாரை பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் பெற்றோர் சமூக ஆர்வலர்கள்.என அனைவரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஜீவித் குமார் தந்தை
நாராயணமூர்த்தி இவர் ஆடு மேய்க்கும் கூலி தொழிலாளி தாய் மகேஸ்வரி தையல் தொழில் செய்பவர்
சகோதரி
ஷர்மிளா தேவி
பிஎஸ்சி கணிதம் பாடபிரிவில் பட்ட படிப்பு படித்து வருகின்றார்.
தம்பி தீபன் 10 ஆம் வகுப்பு சில்வார்பட்டி அரசு மாதிரிமேல்நிலை பள்ளியில் பயின்று வருகின்றார். ஏழை குடும்பத்தைச் சேர்ந்த ஜீவித் குமார் இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வு எழுதி 664 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
Comments
Post a Comment