தமிழக அரசு பட்டாசு தொழிலாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என வணிகர்கள் சங்க தலைவர் விக்கிரமராஜா பேட்டி

விருதுநகர் மாவட்டம்  

சாத்தூர் அக் 19,விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தனியார் பள்ளி வளாகத்தில் மாநில பொருளாளர் சதக்கத்துல்லா தலைமையில் பாபு ராஜேந்திரன் முன்னிலையில் வியாபாரிகள்  சங்கத்தினருடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர்கள் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டார்.
 வணிகர் சங்கங்களின் ஆலோசனை கூட்டத்தில் மாநில தலைவர் விக்கிரமராஜா பேசியது...
கடந்த மார்ச் மாதம் முதல்கொரோனா  பரவல் காரணம்மாக தமிழ்நாட்டில் உள்ள அணைத்து காய்கறிகள் சந்தைகள் நகர்பகுதியில் இருந்து வெளி பகுதிகளுக்கு இடமாற்றம் செய்து செயல்ப்டு வருகிறது.      
தற்போது அரசு பல கட்டங்களாக தளர்வுகளை   அறிவித்து அனைத்து வணிக நிறுவனங்கள் செயல்பட அனுமதித்து வருகிறது.  அது போல் விருதுநகர்  மாவட்டத்தில் சாத்தூர், சிவகாசி பகுதிகளில் நகர்பகுதிக்கு வெளியே செயல்பட்டு வரும் காய்கறி சந்தைகளை  கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு முன்பு செயல்பட்ட இடங்களில் செயல்படவும் அந்த பகுதிகளில் அடிப்படை  வசதிகளான கழிப்பிட வசதியும் அரசு செய்து கொடுக்க வேண்டும் என்றும் கூறினார்.   
 விருதுநகர் மாவட்டம் தீப்பெட்டி மற்றும் பட்டாசு தொழில் அதிகம் உள்ளது.பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழில் பல்லாயிரக்கனக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அந்த தொழிலாளர்கள் அணைவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் வேலையிழந்து  போதிய வருமானம் இல்லாமல் உள்ளனர்.  
 அவர்கள் வீடுகளில் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்கு  வசதியாக  மத்திய அரசு எப்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு பண்டிகைக்கு ரூ.பத்தாயிரம் கொடுத்து அதை வட்டியில்லாமல் திரும்ப  செலுத்த சொல்லியுள்ளதோ ,அது போல தமிழ அரசு பட்டாசு மற்றும் தீப்பெட்டி  தொழிலாளர்களுக்கு  ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் எனவும்,அப்படி வழங்கபடும் பணத்தை திரும்ப செலுத்த எந்தவித நிபந்தனையும் விதிக்க கூடாது என்று தெரிவித்தார். ஆலோசனை கூட்டத்தில் சாத்தூர் நகர்பகுதிகளில் உள்ள பெருபாண்மையான வியாபாரிகள் கலந்து கொண்டனர். நகர வணிகர் சங்க தலைவர் கணேஷ்குமார் ஆலோசனை கூட்ட ஏற்பாடுகளை செய்திருந்தார்.

Comments