திருப்பத்தூரில் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்ட 50க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை போலிசார் கைது செய்தனர்


திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காலம் காலமாக பெண்களை இழிவு படுத்தும் மனுதர்மம் எனும் சனாதன  நூலை தடை செய்ய கோரியும்,பெண்களை தவறாக பேசியதாக எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களின் மீது காவல்துறையினர் பொய் வழக்கு போடப்பட்டுள்ளதை கண்டித்தும்  மாவட்ட செயலாளர் இரா.சுபாஷ்சந்திரபோஸ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட 50க்கு மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை திருப்பத்தூர் நகர போலிசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் வைத்தனர்.

இந்த கண்டன ஆர்பாட்டத்தில் திருப்பத்தூர் நகர செயலாளர் ஆனந்தன், மாவட்ட துணை செயலாளர் கலாசண்முகம்,மாவட்ட செய்தி தொடர்பாளர் கோ.பார்த்தீபன்,வாணியம்பாடி தொகுதி செயலாளர் கோவேந்தன்,மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் வெற்றிகொண்டான், கந்திலி ஒன்றிய செயலாளர்கள் அண்ணாமலை மற்றும் ஏ.ஜே சக்தி திருப்பத்தூர் ஒன்றிய செயலாளர்கள் பகலவன் என்கிற பாஸ்கரன் மற்றும் குபேந்திரன் ஜோலார்பேட்டை நகர செயலாளர் வின்சென்ட், ஜோலார்பேட்டை ஒன்றிய செயலாளர் ரமேஷ்,வழக்கறிஞர் தங்கபாண்டியன் உள்ளிட்ட ஏராளமான விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உடன் இருந்தனர்.

Comments