தேவதானப்பட்டியில் அ.இ.அ.தி.மு.க 49 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கட்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார்கள்
தேவதானப்பட்டி, அக். 17 -தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டியில்
அ.இ.அ.தி.மு.கழகத்தின் 49 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு
பேரூராட்சி அலுவலகம் அருகில் உள்ள எம்ஜிஆர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதையை செலுத்தினார்கள் மற்றும் கட்சி கொடியை ஏற்றி இனிப்புகள் வழங்கினார்கள். இவ்விழாவில் தேவதானப்பட்டி பேரூர் கழக செயலாளர் அப்துல் கபார்கான், ஒன்றிய கழக துணை செயலாளர் எல்.எம்.மணிகண்டன் பேரூர் கழக பொருளாளர் பாலசுப்பிரமணியன், பெரியகுளம் கிழக்கு ஒன்றிய கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஆர்.சூரியா செல்லப்பாண்டி மற்றும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment