சாத்தூர் அக் 13,விருதுதுநகர் மாவட்டம் சாத்தூரில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளான் சட்டம் உட்பட அனைத்து சட்டங்களையும் ரத்து செய்ய கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் கலந்துகொண்ட 30 பேரை காவல்துறை கைது செய்தனர். மத்திய அரசு அன்மையில் புதிய வேளான் மசோதாவை அமல்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுவரும் நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் சாலை மறியல் போராட்டத்திற்கு அழைப்புவிடுத்திருந்தனர் மாவட்ட இனை செயலாளர் பழனிக்குமார் தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஊர்வலமாக சென்று தபால் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் சுமார் 30 நிமிடத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மறியலின்போது மத்திய அரசு கொண்டுவந்துள்ள அனைத்து சட்டங்களையும் ரத்து செய்ய கோஷங்களை எழுப்பினர். இதனை தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேரை சாத்தூர் நகர் காவல்துறை கைது செய்தனர்.