ஸ்ரீமுஷ்ணம் அருகே கொலு விழா - 30 ஆண்டுகளாக கொண்டாடும் கிராம மக்கள்

ஸ்ரீமுஷ்ணம் . அக் 21 ; 

ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள குணமங்கலம்  பகுதியில் 30 ஆண்டுகளுக்கு மேலாக கிராம மக்களின் நலன் கருதியும், தமிழ் கலாச்சாரம் பாரம்பரியம் அழியாமல் ஞாபகம் கூறும் வகையிலும்,  தங்களுடைய வழிபாடு தொடரவும் பத்து நாட்கள் கொலு வைத்துக் கொண்டாடும் குணமங்களத்தை சேர்ந்த ஏகாம்பரம் அமராவதி தம்பதியினர். தங்களது குடும்பத்தாரின் கூட்டு முயற்சியால் கொலு விழாவை சிறப்பாக நடத்தி வருகிறோம் என கூறும் ஏகாம்பரம் அமராவதி கூறுகையில்... 

நவராத்திரி விழா என்பது மக்களை துன்புறுத்தி வந்த மகிசாசுரன் என்ற அரக்கனுடன், ஆதிபராசக்தி 9 நாட்கள் போரிட்டு 10-வது நாளில் அவனை வதம் செய்து வெற்றிகொண்டதாக நம்பப்படுகிறது.இதனை நினைவுகூறும் வகையில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. 
நல்ல எண்ணங்கள், திறமைகளை ஒன்றிணைத்து, கெட்ட எண்ணங்களை அழிப்பது தான் நவராத்திரி விழாவின் முக்கியத்துவமாக ஆன்மிக வரலாறுகள் கூறுகின்றன எனவும் நவராத்திரி கொலுவில் தெய்வீகத்தை உணர்த்தும் சாமி பொம்மைகள், இயற்கை காட்சி பொம்மைகள், விலங்கின பொம்மைகள் உள்ளிட்டவை வைத்து வழிபாடு செய்து வருகிறோம் அதிலும் இந்த வருடம் புதியதாக தாங்கள் கைவண்ணத்தில் குடத்தை வைத்து சரஸ்வதி பொம்மை மற்றும் குத்து விளக்கை வைத்து கிருஷ்ணர் போன்றவை கொலுவில் வைத்தோம் அதனை கிராம மங்கள் ரசித்து செல்கின்றனர் , அதுமட்டுமல்லாமல் விவசாயிகளின் வாழ்க்கை முறையை பிரதிபலிக்கும் விவசாயிகள் நெல் நாற்று நடும் காட்சி முதல் அறுவடை செய்து அதனை வீட்டிற்கு கொண்டு வரும் காட்சிகளை கூட பொம்மைகள் மூலம் வெளிப்படுத்தி உள்ளோம் ,மேலும் திருப்பதி தேவஸ்தானம் ,ஊஞ்சல் சேவை  குழந்தைகள் மகிழ்வோடு கண்டுகளிக்க  பூங்கா,விலங்கியல் காட்சியகம்,ஏர்போர்ட், 
விளையாட்டு போன்ற அனைத்து காட்சிகளும் பிரதிபலிக்கும் வகையில் 500க்கும் மேற்பட்ட பொம்மைகளை பயன்படுத்தி  இந்த கொலு செய்துள்ளோம் என தெரிவித்தனர் . 

மேலும் தற்போது கொரோனா காலம் என்பதால் அதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விலங்கு பொம்மைகளுக்கு முக கவசம் அணிந்து பார்க்க வரும் கிராம மக்கள் மற்றும் குழந்தைகளுக்கு கூட விழிப்புணர்வும் தங்களால் முடிந்த வரை தங்கள் குடும்பத்தினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செய்து வருகிறோம் எனக் கூறுகின்றனர். 

குணமங்கலம் கிராமத்தில் கொலு  விழாவை காண அப்பகுதி கிராம மக்கள் ஆர்வத்தோடு கண்டு ரசித்து கதைகளை கேட்டறிந்து காலை மற்றும் மாலை நேரங்களில் இறைவனை வழிபாடு செய்தும் பாடல்கள் பாடியும் உற்சாகத்தோடு கொண்டாடி வருகின்றனர்.தங்களது குடும்பத்தினரை சேர்ந்த தாரணி,சுபா,சரண்யா, 
ஹர்ஷாவர்தன்,தூஸிதாஸ்ரீ,மதுமிதா,வர்ஷாஸ்ரீ ஆகியோரின் முயற்சியில் தொடர்ந்து விழாகளை கொண்டாடவும் பாரம்பரியத் விழாக்களை மீட்டெடுக்கவும் முயற்சிப்போம் என 
தெரிவித்துகொண்டனர் .

Comments