பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல்

திருப்பத்தூர் மாவட்டம்


ராஜிவ்காந்தி படுகொலை வழக்கில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7நபர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் பேரறிவாளனுக்கு தமிழக அரசு கடந்த 2017 ஆம் ஆண்டு 60 நாட்கள் பரோல் வழங்கியது.

இதனையடுத்து கடந்த 2019 ஆண்டு பேரறிவளானின் தந்தை குயில்தாசனின் உடல்நிலை மற்றும் அவரது தங்கையின் மகள் திருமணத்திற்க்காக  கொண்டு தமிழக அரசு 30நாட்கள் பரோல் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் 90நாட்களுக்கு பரோல் அனுமதிக்கோரி இருந்த நிலையில் தமிழக அரசு கடந்த வாரம் 30 நாட்கள் பரோல் வழங்கி உத்தரவிட்டது.

இதனையடுத்து இன்று காலை சென்னை புழல் சிறையில் இருந்த பேரறிவளானை சிறைத்துறை அதிகாரிகள் போலிசார் பாதுகாப்புடன்  அவரது ஜோலார்பேட்டையில் உள்ள சொந்த வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

அப்போது பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் மஞ்சள் தண்ணீர் மற்றும் கிரிமி நாசனி கொண்டு கை கால்,முகம்  கழுவிய பிறகு வீட்டினுள் சென்றார்.

மேலும் திருப்பத்தூர் டிஎஸ்பி தங்கவேல் தலைமையில் பேரறிவாளனின்  வீட்டிற்கு 30க்கு மேற்பட்ட போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.