வேப்பூர் அருகே ஏரியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழந்தனர்

வேப்பூர்:அக்-21

கடலூர் மாவட்டம்

வேப்பூர் அருகே உள்ள காஞ்சிராங்குளம்  கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா மகள் மனிஷா (12), அதே பகுதியை சேர்ந்த  ஆறுமுகம் மகள் மேகலா(12) இருவரும் ஏழாம் வகுப்பு படித்து வந்தனர் . இவர்கள்
இருவரும்  காஞ்சிராங்குளம் ஏரிக்கரை பகுதியில் குளிக்க சென்றதாக கூறப்படுகிறது.  பின்னர் அவர்கள் நீண்ட  நேரமாகியும் வீடு திரும்பாததால் ஏரிக்கரை பகுதிக்கு சென்ற போது இருவரும் தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. இதனால் அப்பகுதியில் பெரும் சோகம் நிலவியது.

இரு சிறுமிகள் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து சிறுப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...

Comments