பெரியகுளத்தில் காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் தடையை மீறி ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் விடுதலைச் சிறுத்தை கட்சியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கைது
பெரியகுளம், அக்.24 -தேனி மாவட்டம் பெரியகுளத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மனு தர்ம நூலை தடை செய்ய கோரியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறக் வலியுறுத்தி தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் ப நாகரத்தினம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்த நிலையில் ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது இதனைத்தொடர்ந்து தேனி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர் அப்போது மத்திய மாநில அரசுகளை கண்டித்து பல்வேறு கண்டன கோஷங்கள் எழுப்பினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் தேனி பாராளுமன்ற தொகுதி செயலாளர் இரா தமிழ்வாணன்.மாவட்ட பொருளாளர் ரபீக்
பெரியகுளம் சட்டமன்ற செயலாளர் சுசி.தமிழ்பாண்டி துணைச் செயலாளர் ஆண்டவர் மாவட்ட துணை செயலாளர் செல்வராஜ் மாநிலத் துணைச் செயலாளர் சிவனேசன் தேனி இளமதி - பெரியகுளம் நகர செயலாளர் ஜோதி முருகன் தேனி நகர செயலாளர் ஈஸ்வரன் பெரியகுளம் ஒன்றிய செயலாளர் ஆண்டி தேவதானப்பட்டி பேரூர் செயலாளர் மு.ராமகிருஷ்ணன் தொல்.தளபதி நிஜாம் மணிபாரதி பாஸ்கரன் இனியன் கள்ளி சேகுவாரா செல்வராஜ் கோமதி ஆனந்தராஜ் பஞ்சவர்ணம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட விடுதலைச் சிறுத்தைகள்
கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
Comments
Post a Comment