குழந்தைகளுக்கான இருதய சிகிச்சை முகாம், தேசிய ஊட்டச் சத்து விழிப்புணர்வை தொடங்கி வைத்தார் தேனி மாவட்ட ஆட்சியர்

தேனி ,
செப்டம்பர் 23

தேனி மாவட்டம், வீரபாண்டியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேனி மாவட்ட பொது சுகாதார நோய் தடுப்பு மருந்து துறை,RBSK  அமைப்பு மற்றும் மூகாம்பிகா டிரஸ்ட் மூலம் குழந்தைகளுக்கான இருதய சிகிச்சை முகாம் மற்றும் தேனி ஊரக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்துறையின் தேசிய ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வை முகாமையும் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் மரியம் பல்லவி பல்தேவ்  அவர்கள் தொடங்கி வைத்தார்.

RBSK அமைப்புடன் ஸ்ரீ மூகாம்பிகா மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவ மனை கன்னியாகுமரி,இணைந்து வீரபாண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் அமைந்துள்ள செவிலியர் பயிற்சி பள்ளியின் அருகே 0 முதல் 18 வயது வரை உள்ள ஊரக குழந்தைகளில் இருதய கோளாறு உள்ள குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கு முறையான இருதய நிபுணத்துவம் பெற்ற மருத்துவரிடம் ஆலோசனை, சிகிச்சை முறைகள் குறித்து பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

மேலும் தேனி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மற்றும் திட்டத் துறையின் சார்பாக தேசிய ஊட்டச்சத்து மாதமான செப்டம்பர் முழுவதும் மாவட்டம் முழுவது பல்வேறு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஊழியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தனர். இதில் திருமணமான பெண்களுக்கு கர்ப்ப காலங்களில் ஏற்படும் அனீமியா , இரத்த சோகை போன்ற நோயின் தடுப்பு முறைகள், சிகிச்சை முறை , ஊட்டச் சத்து நிறைந்த உணவு வகைகள் மற்றும் சிறு தானியங்கள் போன்றவற்றின் மாதிரி உணவுகள் , உணவு  எவ்வாறு எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற சரிவிகித  உணவு முறைகளை மாதிரி பிரமீடு மூலம் எளிய வகையில் பொது மக்கள் , பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு விழிப்புணர்வை துறை சார்ந்த ஊழியர்கள் விவரித்தனர். மற்றும் 0 முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகளின் எடையினை இன்ஃபென்டோ மீட்டர் கருவி கொண்டும், உயரத்தினை ஸ்டேடியோ மீட்டர் கருவி மூலம் பரிசோதனை நடத்தி நார்மல், மீடியம் மற்றும் Suw என வகைபடுத்திய பின்பு பெற்றோர்களுக்கு தெரியபடுத்தி வயதுக்கேற்ற ஊட்டச்சத்து உணவு முறைகளை வழங்க வேண்டும் என அறிவுறுத்தினர்.

மேலும் வளர் இளம்பெண்களுக்கு இருப்புச் சத்து மாத்திரை வழங்குதல், உடல் வளர்ச்சிக்கு பயன்படும் உணவுபயிர் வகைகள், உடலை பாதுகாக்கும் காய்கறிகள், பழங்கள்,கீரைகள் மற்றும் நுண் ஊட்டச் சத்து, உயிர் சத்து A, அயோடின் சத்து நிறைந்த உணவு பொருட்களை பொதுமக்களின் பார்வைக்கு வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

Comments