சாத்தூர் நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் வீணாகிவரும் குடிநீர்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகர் பகுதியில் குடியிருப்புகளுக்கு தேவையான குடிதண்ணீர் இருக்கன்குடி அணையில் உள்ள  வைப்பாறு பகுதியில் கினறு அமைத்தும்,திருநெல்வேலி மாவட்டம் சீவலபேரியில் உள்ள தாமிரபரணி ஆற்றில் அமைக்கப்பட்டிருக்கும்  கினறுகளில் இருந்து கிடைக்கும் தண்ணீரை வைத்து நகராட்சி  நிர்வாகத்தினர் சாத்தூர் பகுதிகளில் குடியிருக்கும்  பொதுமக்களுக்கு 7 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விநியோகம் செய்து வருகின்றனர்.     

தற்போது திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரியில் இருந்து  சாத்தூர் நகருக்கு தண்ணீர் வரும் குடிநீர் குழாய்  நான்கு வழி சாலை வழியே  செல்கிறது.   
 சாத்தூர் படந்தால் சந்திப்புக்கு அருகே  உழவர் சந்தை செல்லும் சர்வீஸ் சாலையில்  குழாய் லையனில் உடைப்பு ஏற்பட்டு  பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாக அருகில் செல்லும் கழிவு நீர் வாய்க்காலில் கலந்து வீணாகி வருகிறது.  
 நகராட்சியின் அலச்சிய போக்கால் தினமும் பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீனாகி வருகிறது. குடிநீர் குழாய் உடைந்து வெளியேறி செல்லும் தண்ணீர் வெளியேறி வரும் குழாய் லையனை சரி செய்யவேண்டும்  என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Comments