திருவெண்ணெய்நல்லூர் செப்-30
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த ஏனாதிமங்கலம் கிராமத்தில் நேற்று இரவு பெய்த கனமழையால் அதே கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் மனைவி சரோஜா(70) மற்றும் செல்வராஜ் மகன் இளங்கோவன்(44) ஆகிய இருவரும் அவரது கூரை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பொழுது கூரை வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் சரோஜா(70) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதில் தலை மற்றும் இடுப்பில் பலத்த காயங்களுடன் இளங்கோவன் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிகபட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
Comments
Post a Comment