திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுற்றுலாத் துறைக்கு சொந்தமான படகு குழாமில் ஆபத்தில் சிக்கியுள்ள சுற்றுலா பயணிகளை எவ்வாறு மீட்பது பற்றி நேரடியாக பாம்பேயில் இருந்துவந்த நீச்சல் வீரர்கள் கொடைக்கானலில் உள்ள கடும் குளிரையும் பாராமல் இங்கு உள்ள படகு ஓட்டுநர்களுக்கு உயிருக்கு போராடும் பயணிகளை மீட்பது பற்றி நேரடியாக செய்து காண்பித்தார்கள் உடன் படகு குழாமின் நிருவாக அலுவலர் திரு பூபாலன் மேனேஜர் அவர்கள் நேரடி பார்வையில் இருந்த்தார் மற்றும் தமிழ் நாடு தங்கும் விடுதியில் பணிபுரியும் ஊழியர்கள் படகு குழாமில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவருக்கும் ஒருநாள் முழுவதும் தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு முதல் உதவி செய்வது காப்பாற்றுவது பற்றியும் படகு குழாமில் வேலை பார்ப்பவர்களுக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்பது பற்றியும். படகு ஓட்டுனர்கள் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்பதற்கான பயிற்சி கொடுக்கபட்டது மேலும் படகு ஓட்டுனர்கள் அனைவருக்கும் நீச்சல் கட்டாயம் தெரிந்து இருக்கவேண்டும் என்பதை நிருவாகம் உறுதி செய்து இருக்கவேண்டும்என்பதை வலியுறுத்தி உள்ளார்கள். அதற்கான பயிற்சியும் கொடுக்க பட்டது. இந்த பயிற்சியாளர்கள் பாம்பேவில் இருந்து புறப்பட்டு தமிழ் நாடு முழுவதும் உள்ள சுற்றுலா துறைகளுக்கு இந்த பயிற்சியை கொடுத்து வருகிறார்கள்.
Comments
Post a Comment