ஆபத்தை உணராமல் முல்லை பெரியாற்றில் பொதுமக்கள் குளித்து வருகின்றனர்

தேனி, வீரபாண்டி
செப்டம்பர் 23,

    தேனி, வீரபாண்டி பேரூராட்சி முல்லை பெரியாற்றில் ,வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள காரணத்தினால் தற்பொழுது வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருக்கின்றது. தடுப்பணையின் இருபக்கமும் வெள்ளம் ஆர்பரித்து சென்றாலும் பொதுமக்கள் அஜாக்கிரதையாக தடையை மீறி குளித்து வருகின்றனர். ஆகையால் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய முன்னெச்சரிக்கையினை மேற்கொண்டு வெள்ள அபாய எச்சரிக்கை மற்றும் தடுப்பு அமைத்து தருமாறு பொதுதுமக்கள் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Comments