ஸ்ரீமுஷ்ணம் . செப் 26 ;
ஸ்ரீமுஷ்ணத்தில் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல் நலம் பூரண நலம் பெற வேண்டி பூவராக சுவாமி திருக்கோயிலில் தேமுதிக கட்சியினர் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு செய்தனர் .ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி திருக்கோயிலில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் கேப்டன் விஜயகாந்த் கொரோனா தொற்று
நோயால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் கேப்டன் அவர்கள் உடல்நிலை பூரண நலம் பெற வேண்டி பூவராக சுவாமி திருக்கோவிலில் பல்வேறு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் செய்து பிரார்த்தனையில் ஈடுபட்ட தேமுதிக கட்சி தொண்டர்கள்
முன்னதாக விஜயகாந்த் உடல் நலம் பூரண குணம் அடைய வேண்டி விருதாச்சலத்திலிருந்து
பாதயாத்திரையாக மாவட்ட இளைஞர் அணி துணைசெயலாளர் ஜானகிராமன் தலைமையில் மாவட்ட மகளிர் அணி செயலாளர் அரசிலங்குமாரி மற்றும் முன்னாள் நகர செயலாளர் சங்கர் வர்த்தகர் அணி செயலாளர் குமார் ஒன்றிய அவை தலைவர் பூமாலைஇளைஞர் அணி செந்தில் சுரேஷ் சந்துரு கங்க வருகை தந்தனர். அவர்களுக்கு ஸ்ரீமுஷ்ணம் ஒன்றிய செயலாளர் ராசவன்னியன் தலைமையில் ஸ்ரீமுஷ்ணம் பேரூர் கழக அவைதலைவர் செல்வராசு பொருளாளர் வழக்கறிஞர் சுந்தரம் வரவேற்றனர் இந்நிகழ்வில் ஒன்றிய துணை செயலாளர் ராஜேந்திரகுமார், கிருஷ்ணராஜ், பேரூர்கழக துணைசெயலாளர் துரை சிவராமன் இளைஞர் அணி செயலாளர் சதீஷ்குமார் மாவட்ட பிரிதிநிதி வெற்றிவேல் ஆகியோர் கலந்து கொண்டனர் .
Comments
Post a Comment