திருக்கழுக்குன்றம், செப்.23
செங்கல்பட்டு மாவட்டம்
திருக்கழுக்குன்றம் அருகே எச்சூர் பகுதியில் முதியவர் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அடுத்த எச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் டில்லிபாபு என்கிற பிச்சாண்டி (வயது60), விவசாயியான இவர் திருக்கழுக்குன்றம் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் மாணவர்களை ஏற்றி வரும் பள்ளி வேனில் கிளீனராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த 6 மாதமாக கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால் வேலை இழந்த பிச்சாண்டி போதிய வருமானமின்றி குடும்பத்துடன் பரிதவித்து வந்துள்ளார்.
விவசாய தொழிலில் முதலீடு செய்து நெல் பயிரிட்டுள்ளார். நெல் மூட்டைகள் விற்பனை ஆகாததால் உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைக்கவில்லையே என வறுமையில் தவித்து வந்த அவர் வாழ்க்கையில் விரக்தியடைந்தார். விரக்தியில் மனமுடைந்த பிச்சாண்டி தனது விவசாய தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவலறிந்து விரைந்து சென்ற மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன், உதவி ஆய்வாளர் குப்புசாமி மற்றும் போலீசார் அவரது சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments
Post a Comment