புதிய வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுருத்தி திமுக கூட்டனி கட்சிகள்ஆர்ப்பாட்டம்


சாத்தூர் செப் 28.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர்  முக்குராந்தலில் மத்திய அரசை கண்டித்து திமுக கூடட்னி கட்சிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர். சாத்தூர் நகர ஒன்றிய திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள்  சார்பில்  மத்திய அரசு  கொண்டு வந்துள்ள புதிய வேளாண்மை  சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டங்களை ஆதரிக்கும் மாநில அரசை கண்டித்து திமுக நகர செயலாளர் குருசாமி தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷம் போட்டனர். மத்திய அரசின் புதிய வேளாண் திட்டத்தை திரும்ப பெரும் வரை போராட்டம் நடத்துவோம் என தெரிவித்தனர்.ஆர்பாட்டத்தில் திமுக கூட்டனி கட்சிகளான சிபிஎம்,சிபிஐ,மதிமுக, இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும்  கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

Comments