போடி நாயக்கனூர்,
செப்டம்பர் 23.
தேனி மாவட்டம், போடி நாயக்கனூரில் இடது சாரி கட்சிகளின் சார்பில் மக்கள் நல கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தேவர் சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முக்கிய கோரிக்கைகளான,
தமிழகத்திற்கு வழங்க வேண்டிய GST இடிப்பீட்டு தொகையை உடனே வழங்க வேண்டும் என்றும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும்,நுண்நிதி நிறுவனங்கள், வங்கிகள், கூட்டுறவு அமைப்புகள் கடன் வசூலை தள்ளி வைத்தும் வட்டியை ஒரு ஆண்டுக்கு தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், இரயில்வே, நிலக்கரி , LIC உள்ளிட்ட பொது துறைகளை தனியார மயமாக்குவதை கைவிடவும், தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை கைவிட வேண்டும் .
மத்திய அரசு கொரோனா காலத்தை பயன்படுத்தி கொண்டு வந்துள்ள தேசிய கல்வி கொள்கை, சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு, மின்சார திருத்தச் சட்டம், வேளாண் உற்பத்தி பொருட்கள், வணிக ஊக்குவிப்புச் சட்டம், விவசாயிகளுக்கு விலை உத்திரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு அவசரச் சட்டம் ஆகிய சட்டங்களையும் கொள்கைகளையும் கை விட வேண்டும். கிராமப்புற உறுதியளிப்பு திட்டத்தில், 100 நாளை 200 நாளாக பேரூராட்சிக்கும் விஸ்தரிக்க வேண்டும், மத்திய அரசின் விவசாயிகளுக்கான மானிய திட்டத்தை விவசாய தொழிலாளர்கள், குத்தகை விவசாயிகளுக்கு விரிவு படுத்த வேண்டும் என்று சிபிஐ கட்சி செயலாளர் முருகேசன் பொதுமக்களிடம் எடுத்துரைத்தார். வாழ்த்துரை மாநில விவசாய சங்க குழு உறுப்பினர் ராஜப்பன் மற்றும் பொறுப்பாளர்கள்.
Comments
Post a Comment