ஆம்பூர் உட்கோட்டம் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் கொரனோ வைரஸ் நோய் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

ஆம்பூர் உட்கோட்டம் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் கொரனோ வைரஸ் நோய் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவமனையில் அஞ்சலி  உதவி ஆய்வாளர் மனைவி திலகவதி காவல்துறை அதிகாரிகளுக்கு சல்யூட் செய்து மரியாதை செலுத்தினார்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் உட்கோட்டம் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் சண்முகம் (வயது 51) இவர் கடந்த 12 ஆம் தேதி முதல் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த நிலையில் 24 ஆம் தேதி வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் பின்னர் 25 ஆம் தேதி உதவி ஆய்வாளர் சண்முகத்திற்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று பரிசோதனை செய்யப்பட்டது இந்நிலையில் 26 ஆம் தேதி பரிசோதனை முடிவில் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டு  கொரோனா வைரஸ் நோய் தொற்று  வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் அவரது உடலுக்கு திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு நேரில் வந்து பிபி கிட் அணிந்து பிரேத பரிசோதனை அறைக்கு சென்று அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார் அப்போது அவரது மனைவி திலகவதி உயரதிகாரிகளுக்கு தனது கணவர் எப்போதும் மரியாதையுடன் இருப்பார் என்பதற்கு சான்றாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் தனது சல்யூட்டை தெரிவித்துக்கொள்கிறேன் என்று மருத்துவமனையில் தெரிவித்ததால் மருத்துவமனை வளாகமே சோகத்தில் ஆழ்ந்தது

உதவி ஆய்வாளர் சண்முகத்திற்கு திலகவதி என்ற மனைவியும் மற்றும் 1 மகள்  2 மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments