கல்லூரி படிப்பை தொடர முடியாத மாணவனுக்கு உதவி செய்த சாத்தூர் நகராட்சி பிட்டர்

செய்தி 
சாத்தூர்  

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கல்லூரி படிப்பை தொடர முடியாத மாணவனுக்கு உதவி செய்த சாத்தூர் நகராட்சி பிட்டர். வெம்பக்கோட்டை தாலுகா பேர்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த செல்வகுமார் தாய்,தந்தையை இழந்து கல்லூரிகட்டணம் செலுத்த முடியாமல் பாட்டியின் முதியோர் உதவித்தொகையில் வாழ்ந்துவந்த மாணவன் சாத்தூர் பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தபோது சாத்தூர் தாசில்தார் ராமசுப்பிரமணியன் மாணவர் செல்வக்குமாரை மீண்டும் கல்லூரியில் சேர்க்க உதவி செய்வதாக அழைத்து வந்தபோது சாத்தூர் நகராட்சி பிட்டர் சண்முகபாண்டியன் மாணவரின் கல்லூரி கட்டண செலவு முழுவதையும் ஏற்று கல்லூரி முதலாம் ஆண்டு கட்டணம் ரூ.12,000 ஐ கல்வி உதவி தொகையை வழங்கினார். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் மகேஷ்,படந்தால் வருவாய் ஆய்வாளர் பாலு அவர்களும் உடனிருந்தனர்.