போடி நாயக்கனூர்,
செப்டம்பர் 21
தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் ஒன்றியம் கொட்ட குடி மலை கிராமத்தில் 100 க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகளில் சுமார் 1200 மக்கள் வாழ்ந்து வருகின்றனர். போடி நகரிலிருந்து 15 கி.மீ.தொலைவில் குரங்கனி செல்லும் தேசிய நெடுஞ்சாலை வழியில் மேற்கு தொடர்ச்சி மலையின் கிழக்குப் பகுதியில் இந்த மலை கிராமம் அமைந்துள்ளது. கொட்ட குடி ஆறு மற்றும் அழகிய நீர் வீழச்சி செல்வது இந்த மலை கிராமத்தின் சிறப்புகளில் ஒன்று ஆகையால் வெளியூர் சுற்றுலா பயணிகளின் வருகை மழை காலங்களில் சற்று அதிகமாகவே இருக்கும் என்பது குறிப்பிடதக்கது.
குரங்கனி தேசிய நெடுஞ்சாலையிலிருந்து கொட்டகுடி கிராமம் செல்லும் தார் சாலை கடந்த 5 வருடங்களில் குண்டும் குழியுமாக மிகவும் சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது. மேலும் இக்கிராமத்திலிருந்து 1 கி.மீ. தூரத்திற்கு கடந்த 50 ஆண்டு களுக்கு மேலாக தார் சாலை இல்லாமல் மணல் நிறைந்த மண் சாலையில் தான் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் பயணித்து வருகின்றனர். ஏனென்றால் அப்பகுதி வனத்துறையின் கட்டுப்பாட்டில் வருவதால் தற்பொழுது வரை கொட்ட குடி கிராமத்திற்கு தார்சாலை அமைப்பதற்கு அனுமதிக்கவில்லை. ஆகையால் பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலன் கருதி மாவட்ட நிரவாகம் தலையிட்டு புதிய தார் சாலை வசதி மற்றும் சீரமைத்து தர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் நெடுங்காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Comments
Post a Comment