சொக்கன்குடியிருப்பில் திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் சாலை மறியல் போராட்டம் நடத்த போவதாக எச்சரிக்கை

சாத்தான்குளம் 

சொக்கன்குடியிருப்பில் திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் சாலை மறியல் போராட்டம் நடத்த போவதாக எச்சரிக்கை 

சாத்தான்குளம் அருகே  சொக்கன்குடியிருப்பை சேர்ந்த செல்வனின் உடலை வாங்க 5-வது நாளாக மறுத்து உறவினர்கள், ஊர்மக்கள்,  மற்றும் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

மேலும் அவர்கள் தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் மற்றும் திருமணவேல் உள்ளிட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்னெடுத்து வருகின்றனர்.

தற்போது திருச்செந்தூர் எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில்  இரவிலும் ஊர் பொதுமக்கள் மற்றும் திமுக மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் சுமார் 1000 பேர் போராட்டத்தில் கலந்து கொண்டு, போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதில் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ பேசும் போது இன்று மாலை 3-மணிக்குள் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் மற்றும் அதிமுக பிரமுகர் திருமணவேல் ஆகியோரை கைது செய்யாவிட்டால் அறவழி போரட்டமானது சாலை மறியல் போராட்டமாக முன்னெடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் சொக்கன்குடியிருப்பு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Comments