பெரியகுளம் கெளமாரியம்மன் திருக்கோவில் பாரத பிரதமர் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு பூஜை மற்றும் சிறப்பு அபிஷேகம் வழிபாடு

 பெரியகுளம்
தேனி மாவட்டம் பெரியகுளம் நகரில் பாரதிய ஜனதா கட்சி யின் சார்பாக 
 பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 70 வது பிறந்தநாள் விழாவை சிறப்பிக்கும் விதமாக பெரியகுளம் நகரில் உள்ள  கெளமாரியம்மன் திருக்கோவில் பாரத பிரதமர் பெயரில் சிறப்பு பூஜை மற்றும் சிறப்பு அபிஷேகம்  செய்தனர் இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் பி.சி.பாண்டியன்  முன்னிலையில் நகர் தலைவர்  ஆர்.முருகன் தலைமையில் நகர் பகுதிகளில் இனிப்புகள் வழங்கி நகர் சார்பாக சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் கணேஷ்குமார் மாவட்ட நிர்வாகிகள் செந்தில்குமார் ராஜா பத்ரிநாத் பாலு குனசீலன் மற்றும் நகர நிர்வாகிகள்  கிருஷ்ணமுர்த்தி  முத்துகருப்பன் மயில்வேல் முத்துபாண்டி வினோத்  சிவாபிரபு  சேகர் சினிவாசன் மற்றும் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..