கொடைக்கானல் பகுதிகளில் முகக்கவச விழிப்புணர்வு தேவை

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதிகளில் முகக் கவசம் விழிப்புணர்வு தேவை. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளும் 90% பேர்  முகவசம் அணிவது இல்லை. உள்ளூர் மக்களும் பகுதி பேர் கவசம் அணிவதில்லை. கொடைக்கானலில் உள்ள வியாபார பெருமக்களுக்கும் இந்த முக கவச விழிப்புணர்வு தேவை. நம் அரசு அதிகாரிகளும் ஊழியர்களும் செவிலியர்களும் டாக்டர்கள்களும்  நகராட்சி ஆணையாளர் அவர்களும் மற்றும்  சுகாதாரத்துறை அதிகாரிகளும்   இதுவரை தங்கள் உயிரை பற்றி யோசிக்காமல் மக்களை பாதுகாக்க எடுத்த முயற்சியும் சேவையும் அளவற்றது. அந்த முயற்சி வீண் போகக்கூடாது. இன்னும் கொஞ்சம் கடுமையாக முகக் கவச  விழிப்புணர்வு நடவடிக்கை தேவை. கடந்த சில நாட்களுக்கு முன் நமது கொடைக்கானல் நகராட்சி சுகாதார ஆய்வாளர் திரு சுப்பையா அவர்கள் ஒரு குழு அமைத்து முக கவசம் அணியாதவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி. மீறும் பட்சத்தில் அபதாரம் வி தித்து  வந்தார்கள் ஒரு சில பேர் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்  கைவிட்டுவிட்டார்.  அந்த சேவையை மீண்டும் தொடரவேண்டும். நமது காவல்துறை தொடர்ந்து அந்த முக  கவசம் அணிவது பற்றிய நடவடிக்கை எடுத்து  வருகிறது பாராட்டத்தக்கது. மேலும் நகராட்சி நிர்வாகம் சுகாதார ஆய்வாளர் திரு சுப்பையா அவர்கள் தலைமையில் குழு அமைத்து இந்த முக  கவசம் விழிப்புணர்வு தேவை என்பதை உணர்த்தவேண்டும் . நம் மக்களைப் பாதுகாப்பது நமது ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும் தயவு கூறுந்தது  முகக்கவச விழிப்புணர்வு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது கொடைக்கானல் மக்களின் கோரிக்கையாகும்.

Comments