தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் எலித்தொல்லையால் நோயாளிகள் பாதிக்கப்படுவது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்த தமுமுக


தேனி, செப். 21-தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை சேர்ந்த காஜா மைதீன் என்பவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வார்டு 400-ல் சிகிச்சை பெற்று வருகிறார். இரவு நேரங்களில் எலிகள் நீரிழிவு நோயாளிகளின் கால்களை கடித்து குதறுவதால் பெரும் பாதிப்பு ஏற்படுவதாக தெரிவித்ததையடுத்து தமுமுக சார்பில் ஊடகங்கள் வாயிலாக மாவட்ட நிர்வாகத்தின்கவனத்திற்கு தெரியப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் இன்று தேனி மாவட்ட ஆட்சித் தலைவரிடம்நடவடிக்கை எடுக்க கோரி தேனி மாவட்ட தமுமுக-மமக தலைவர் மௌலவி அப்துல்லாஹ் பத்ரி தலைமையில் மனு அளிக்கப்பட்டது. மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர் சார்பில் முகமது நிஷார்தீன்பெரியகுளம் நகர தலைவர் முகமது சித்திக் தேவதானப்பட்டி நகர பொருளாளர் அசார் அஹமது மற்றும் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் உடனிருந்தனர்.