பெரியகுளத்தில் விவசாயிகள் சிறு வணிகர்களை பாதிக்கும் சட்டங்களை எதிர்த்து மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது


பெரியகுளம், செப். 28- தேனி மாவட்டம் பெரியகுளத்தில்
விவசாயிகள் சிறு வணிகர்களை பாதிக்கும் சட்டங்களை எதிர்த்து மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக மாநில விவசாய அணி தலைவர் எல். மூக்கையா தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். சரவணகுமார்..
பெரியகுளம் திமுக நகர செயலாளர். எஸ். பி.முரளி.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் நாகரத்தினம் தேனி பாராளுமன்ற தொகுதிச் செயலாளர். இரா. தமிழ்வாணன். மாவட்ட பொருளாளர் ஜெ. ரபிக் இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்ட இளைஞரணி செயலாளர் நூர்  முகமது..மதிமுக. நகர செயலாளர் சோலையப்பன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ராமச்சந்திரன் வெண்மணி உள்ளிட்ட தோழமைக் கட்சியைச் சேர்ந்தவர்கள் விவசாயிகள் சிறு வணிகர்களை பாதிக்கும் சட்டங்களை எதிர்த்து மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர் அப்போது  மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக பல்வேறு கண்டன கோஷங்கள் எழுப்பினர்ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.
இதேபோன்று 
திமுக பேரூர் கழகத்தின் சார்பில் பெரியகுளம் தென்கரை பேரூராட்சி கள்ளிப்பட்டியில் தென்கரை பேரூர் செயலாளர் பாலமுருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் லட்சுமிபுரம் கிளைச் செயலாளர்
அசோக் குமார்.மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் கண்ணையா.விஜய் தங்கமுத்து உள்ளிட்ட50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து தேவதானப்பட்டி பேரூர்  பகுதியில் திமுக தலைமையில் அனைத்து கட்சி சார்பில் வேளாண் சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்  இதில் விசிக பேரூர் செயலாளர் மு. ராமகிருஷ்ணன்  காமாட்சி அக்பர்  பாட்ஷா உள்ளிட்ட தோழமை கட்சியினர்  கலந்து கொண்டனர்.

Comments