பெரியகுளத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் பகத்சிங் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகத்தில் வேலை வாய்ப்புகளில் தமிழக இளைஞருக்கு முன்னுரிமை வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

பெரியகுளம், செப். 28-தேனி மாவட்டம் பெரியகுளத்தில்
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் பகத்சிங் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகத்தில் வேலை வாய்ப்புகளில் தமிழக இளைஞருக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என கோரி 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார் 
அப்போது தமிழக இளைஞர்களுக்கு தமிழகத்தில்  வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கிடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய மாநில அரசுகளுக்கு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு
கிளைச் செயலாளர் தீனதயாளன் துணைத் தலைவர் செல்வம் ராகவன் அம்பேத் வினித் கனி செல்வன் சக்தி முருகன் பால முருகன்-சுந்தர்ஜி.
ரதிவர்மன் மற்றும் கோபி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

Comments