திருச்சி மாவட்டம் தொட்டியம் தி மு க மற்றும் அனைத்து கட்சிகளின் சார்பில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

தொட்டியம், செப்டம்பர்-28  திருச்சி மாவட்டம்

திருச்சி மாவட்டம், தொட்டியம்  வட்டாச்சியர் அலுவலகம் எதிரில் அனைத்து கட்சிகளின் சார்பில் திராவிட முன்னேற்ற கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி,  மற்றும் கொங்குநாடு மக்கள் தேச கட்சி போன்ற தோழமை கட்சிகளுடன் சேர்ந்து கழக தலைவர் தளபதி மற்றும் கழக முதன்மை செயலாளர் K.N.நேரு ஆணைப்படியும் திருச்சி வடக்கு மாவட்ட  தி.மு.க  காடுவெட்டி 
N.தியாகராஜன்  வடக்கு மாவட்ட செயலாளர் அவர்கள் தலைமையில்  நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட வேளாண் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெறக்கோரியும், கார்பரேட் நிறுவனங்களை வளர்த்திடும் பாஜக அரசின் வேளாண் சட்டத்தினை அனுமதிக்க கூடாது எனவும்  ,  மத்திய அரசின் வேளாண் சட்ட திருத்தம் மாநில உரிமைகளுக்கு எதிரானது எனவு,   இந்தியாவில் உள்ள 150 மில்லியன் விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை முற்றிலும் அழிவு பாதைக்கு கொண்டு செல்லும் என்றும்,  கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் திமுக வினர் சார்பில் பால.ந. திருஞானம், S.A.S. ராஜேஷ், தங்கவேல் , மல்லன், சந்திரசேகர்,  மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்  வக்கீல் ராஜரத்தினம் , பாக்கியராஜ், குருமூர்த்தி, பிரபு, கார்த்தி, காங்கிரஸ் கட்சி சார்பில்  S. கிருஷ்ணமூர்த்தி (சாமி) , அய்யாசாமி, பா.பொ. பரமசிவம், சீனிவசநல்லூர் ராஜா, கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ராமநாதன், முருகன், மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி,கொங்குநாடு மக்கள் தேசகட்சி  ஒன்றியம் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கண்டணம் தெரிவித்தனர். 


Comments