போடி நாயக்கனூர்,
செப்டம்பர் 28
தேனி மாவட்டம், போடி நாயக்கனூர் ஒன்றியத்திற்குட்பட்ட சில்லமரத்துப்பட்டி, தருமத்துப்பட்டி ஆகிய கிராமங்களில் அனைத்து கட்சிகளின் சார்பில் திராவிட முன்னேற்ற கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழ் புலிகள் மற்றும் ஆதிதமிழர் போன்ற தோழமை கட்சிகளுடன் சேர்ந்து போடி - தேவாரம் தேசிய நெடுஞ்சாலையில் போடி தொகுதி திமுக முன்னால் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் தலைமையில் தளபதியாரின் ஆணைக்கிணங்க,நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட வேளாண் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெறக்கோரியும், கார்பரேட் நிறுவனங்களை வளர்த்திடும் பாஜக அரசின் வேளாண் சட்டத்தினை அனுமதிக்க கூடாது , ஏழை, நடுத்தர வர்க்க மக்களின் உணவு பாதுகாப்பை நாசமாக்கி விடும், நுகர்வோருக்கு எதிரான சட்டத்தினை எதிர்த்திடுவோம் என்றும்,
இந்தியாவின் முதுகலும் பே விவசாயமாகும் ஆகையால் இச்சட்டம் வேளாண் நாடான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு எதிரானது. மத்திய அரசின் வேளாண் சட்ட திருத்தம் மாநில உரிமைகளுக்கு எதிரானது, கூட்டாச்சி தத்துவத்திற்கும் எதிரானது என்று கண்டனத்தை தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அதே போல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் ராஜப்பன் தலைமையில் தருமத்துப்பட்டி கிராம சாலைப்பகுதில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திருத்த சட்ட மசோதா இந்தியாவில் உள்ள 150 மில்லியன் விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை முற்றிலும் அழிவு பாதைக்கு கொண்டு செல்லும் என்றும், வேளாண் சட்ட திருத்தத்தினை முழுமையாக பொதுமக்களிடம் விவரித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Comments
Post a Comment