புகைப்பட கலைஞர்களுக்கு இலவசமாக பயிற்சி நடத்தப்பட்டது

சாத்தூர் செப் 27 
  விருதுதுநகர் மாவட்டம் சாத்தூரில் தனியார்  திருமண மண்டபத்தில்  திருநெல்வேலி மரியா கலர் லேப் மற்றும் ஐ யாம் ஏ போட்டோகிராபர் கிளப் இணைந்து  புகைப்பட கலைஞர்களுக்கு இலவச புகைப்பட பயிற்சி நடத்தினார்கள்.  

 புகைப்பட கலைஞர்களுக்கு இன்றைய புகைப்படத் துறையில் கேண்டிட் போட்டோகிராபி, லைட்டிங் போட்டோகிராபி, பிரேமிங் காம்போசிசன் போட்டோகிராபி முறையை  எப்படி கையாளுவது என்பதை செய்முறை விளக்கத்துடன் பயிற்சி வகுப்பை நடத்தினார் புகைப்பட கலைஞர் பயிற்சி ஆசிரியர் ஆண்டன் ஜான்.      
 திருமணம் மற்றும் நிகழ்ச்சிகளில் எடுக்கபடும் போட்டோக்களை  இன்றை கால கட்டத்தில் நவீன முறையில் ஆல்பமாக டிசைன் செய்வது, விதவிதமாக பிரிண்ட் அடிப்பது ஆல்பம் பல மாடல்களில் லேமினேட் பண்ணுவது குறித்து திருநெல்வேலி மரியா கலர் லேப்பில் இருந்து ஆல்பங்கள் புகைப்பட கலைஞர்களுக்கு காண்பிக்கப்பட்டது.  
பயிற்சி ஆசிரியர் புகைப்படக்கலைஞர் அண்டனி ஜான் எடுத்த wild life போட்டோக்களை கண்காட்சியாக காண்பிக்கப்பட்டது.பயிற்ச்சிக்கான ஏற்பாடுகளை ஐ ஆம் போட்டோகிரப்பர் கிளப் தலைவர் பிரேம் ஆனந்த், இசக்கிராஜா,விக்கி,மாரிஸ்வரன், மகேந்திரன், ரமேஷ்,நயன் சிங் ஆகியோர் செய்திருந்தனர்.

Comments