பெரியசெவலை கூட்ரோட்டில் திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்


திருவெண்ணெய்நல்லூர் செப்-28

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த பெரியசெவலை கூட்ரோட்டில் திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவெண்ணெய்நல்லூர் அடுத்த பெரியசெவலை கூட்ரோட்டில்  திமுக சார்பில் மத்திய அரசு கொண்டு வந்த 3-வேளாண் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை ஆதரித்த மாநில அதிமுக அரசை கண்டித்தும் கிழக்கு ஒன்றிய செயலாளர் துரைராஜ் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பொது மக்களையும் விவசாயிகளையும் வஞ்சிக்க கூடிய வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் மசோதா சட்டம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகை அளிக்கும் வகையில் உருவாக்கிய சட்டம் மாநில உறுப்புரிமை பறிப்பு, உணவுப்பொருட்கள் விலை உயர்வு, இடைத்தரகர்களுக்கு லாபம், ரேஷன் கடைகளை மூடும் நிலை உருவாகக்கூடிய சட்டம் பொருளாதாரம் வீழ்ச்சி, வேலையின்மை, விவசாயிகளின் தற்கொலை அதிகரிப்பு உள்ளிட்டவற்றை கண்டித்து  மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய நாடாளுமன்றத்தில் இதுவரை நிகழாத சம்பவமும் நடந்துள்ளது. ஒரு துறையின் மசோதா தாக்கல் செய்யும்போது, அந்த துறையைச் சார்ந்த அமைச்சரே ராஜினாமா செய்வது இதுவரை நிகழாத அதிசயம். பிரதமர் நரேந்திரமோடியின் அமைச்சரவையில் மத்திய உணவு பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் துறை அமைச்சராக இருந்த ஹர்சிம்ரத் கவுர் பாதல், புதிய வேளாண் மசோதாக்களுக்கு எதிராக தனது பதவியை துணிந்து ராஜினாமா செய்துள்ளார். மத்தியில் ஆளும் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிரோமணி அகாலிதளத்தை சேர்ந்தர் பாதல், மோடி அமைச்சரவையில் இருந்து விலகிய முதல் பெண் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஒன்றிய துணை செயலாளர்கள் சந்திரசேகரன், வீராசாமி, பிரபாவதி தாமோதரன், மாவட்ட பிரதிநிதி ராஜேஷ்கண்ணா, ஒன்றிய பொருளாளர் மைக்கேல், பொதுக்குழு உறுப்பினர் சுபாஷினி அய்யனார், டாக்டர்.காவியவேந்தன் கிராமம் ஊராட்சி செயலாளர் ஸ்ரீதர், பெரியசெவலை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சௌந்தர்ராஜன், கிளை செயலாளர் சிவராஜ் மற்றும மாற்றுக் கட்சி சேர்ந்த நிர்வாகிகள் பலர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Comments