பத்திரபதிவு அலுவகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை திடீர் சோதனை


திருக்கழுக்குன்றம் செப் 24

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றத்தில் பத்திரபதிவு அலுவலகத்தில் கஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு துறை துணை கண்காணிப்பாளர் கலைச்செல்வன் தலைமையில் ஆய்வாளர்கள் அண்ணா துறை, தமிழரசி, கீதா ஆகியோருடன் ஏழு பேர் கொண்ட குழு திடீர் சோதனை மேற்கொண்டனர் இதில் கணக்கில் வராத பணம் ரூபாய் 143,320 (ஒரு லட்சத்து நாற்பத்தி மூன்றாயிரத்து முந்நூற்று இருபது ரூபாய்) கைப்பற்றி சுமார் 7 மணி நேரம் தொடர்ந்து சோதனை செய்து சார்பதிவாளர் இரா.திருமலைஸ்ரீதரிடம் விசாரணை நடத்தினர்.

Comments