திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில்
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக விசாரணை அல்லது புகார் கொடுக்க வருபவர்கள் விசாரணை செய்வதற்காகவும், அதிகாரிகளைக் பார்ப்பதற்கும் அலுவலகத்திற்கு வெளியே தற்காலிக சாமியானா பந்தல் அமைத்து அதில் பொதுமக்களை சந்தித்து புகார்களை விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த வாரம் ஒரு மழைநாளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தித்து பேசிய போது இனி மழை காலம் என்பதால் பொதுமக்கள் சாமியான பந்தலில் சந்தித்து விசாரிப்பதால்,
மழையில் நனைவதோடு,
அவர்கள் கொண்டுவரும் ஆவணங்கள் நனைந்து போகும் இது பொதுமக்களுக்கும், காவலர்களுக்கும் மிகுந்த சிரமத்தையும், அசவுகரியத்தையும் ஏற்படுத்தும் எனவே சாமியானா பந்தலுக்கு பதிலாக தகரத்தில் செட் அமைத்தால் அனைவருக்கும் இடையூறு இல்லாமலும் மழையிலிருந்து பாதுகாப்பாகவும் இருக்கும் என்றும் தினக்காற்று நாளிதழ் சார்பாக சிறிய வேண்டுகோள் வைக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிபிரியா அவர்கள் விரைவில் தகரத்திலான கூரை அமைத்து தருவதாக தெரிவித்திருந்தார்.
தற்போது அவர் கூறியபடியே சில நாட்களிலேயே தற்காலிக கூரை செட் அமைக்கும் பணி விரைவாக நடந்து வருகிறது,
இது தொடர்பாக
தனி பிரிவு காவல் ஆய்வாளர் முத்து லெட்சுமி அவர்களிடம் கேட்ட போது
S P அவர்கள் இதனை விரைந்து முடிக்க வேண்டும் என உத்தரவுப்படி வேகமாக வேலை நடைபெறுவதாகவும்,
இன்னும் இரண்டொரு நாளில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றும் தெரிவித்தார்.
மக்களுக்காக நாம் வைத்த கோரிக்கையை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுத்த திண்டுக்கல் மாவட்ட காவல் துறைக்கு தின காற்று நாளிதழ் சார்பாக வாழ்த்துகள்!