ஆம்பூர் அருகே சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மேய்ந்து கொண்டிருந்த கர்ப்பிணி எருமை மாட்டின் மீது கார் மோதிய விபத்தில் எருமை மாடு உயிரிழப்பு

.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன் இவர் தனக்கு சொந்தமான கர்ப்பமாக இருந்த எருமை மாட்டினை சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ஓரம்  மேய்ச்சலில் ஈடுபடுத்திக்கொண்டிருந்தார்.

அப்பொழுது வேலூரிலிருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்ற கார் ஒன்று அதிவேகமாக சாலையில் மேய்ச்சலில் இருந்த எருமை மாட்டின் மீது மோதியது

இவ்விபத்தில் கர்ப்பிணியான எருமை மாடு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது,

இவ்விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் இவ்விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments