தமிழ் புலிகள் கட்சி சார்பில் பெரியார் பிறந்த நாளில் நீட் தேர்வு எதிர்ப்பு ஊர்வலம்

போடிநாயக்கனூர்,
செப்டம்பர்17

தேனி மாவட்டம், போடி நாயக்கனூர் நகராட்சியில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ் புலிகள் கட்சி சார்பில் நீட் தேர்வு எதிர்ப்பு வாசகங்களை எழுதி ஊர்வலமாக நடைபயணம் மேற்கொண்டு தந்தை பெரியார் வளாகத்தில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். மேலும் பெண்களுக்கு சம உரிமை அளிக்க கோரியும், தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, சாதி ஒழிப்பு மற்றும் சமத்துவம் போன்றவற்றினை முழங்கி உறுதி மொழியை மாநில தென் மண்டல செயலாளர் வீரபாண்டியன், தென் மண்டல துணைச்செயலாளர் ஆதி நாகராசு, தேனி மேற்கு மாவட்ட செயலாளர் வைரமுத்து மற்றும் மாவட்ட, நகராட்சி பொறுப்பாளர்கள் ஏற்றனர்.