சாத்தூர் செப் 25 ,விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அகில இந்திய விவசாயிகள் சங்களின் கூட்டமைப்பை சேர்ந்த 100 மேற்பட்ட விவசாயிகள் சாத்தூரில் மதுரை பஸ்ஸ்டாப்பில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் செய்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மத்திய அரசு புதிதாக கொண்டுவர உள்ள வேளான் சட்டத்தினால் விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகும்.
அந்த சட்டத்தினால் பண்ணாட்டு கம்பெனிகள் இந்திய விவசாயத்தை கபளிகரம் செய்யவே வழி வகுக்கும்.
இந்திய மக்களுக்கு உணவு பாதுகாப்பில் பெரும் அச்சுருத்தல் ஏற்படும் என்றும் அந்த சட்டத்தை அமுல் படுத்த கூடாது என கோஷங்கள் எழுப்பி சாலை மறியல் செய்தனர்.
இதனால் சுமார் அரைமணி நேரம் சாத்தூர் மதுரை சாலையில் போக்குவரத்து தடைபட்டது.சாலை மறியலில் ஈடுபட்ட விவசாய சங்கத்தினரை சாத்தூர் காவல் துறையினர் கைது செய்து தனியார் திருமனமண்டபத்தில் தங்கவைத்துள்ளனர்.
Comments
Post a Comment