விருதுநகர் தேமுதிக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நத்தத்துப்பட்டி ராமர் பாண்டியன் தலைமையில் இருக்கண்குடி அருள்மிகு மாரியம்மன் கோவிலில் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்


சாத்தூர் செப் 30,விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தென்மாவட்டத்தில் புகழ்பெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் விருதுநகர் தேமுதிக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நத்தத்துப்பட்டி ராமர் பாண்டியன் தலைமையில் சாத்தூர்,அருப்புக்கோட்டை, திருச்சுழி, சட்டமன்ற தொகுதி நகர, ஒன்றிய நிர்வாகிகள் அனைவரும் தேமுதிக நிறுவன தலைவர் புரட்சிக்கலைஞர் கேப்டன் மற்றும் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இருவரும் பூரண உடல் நலம் பெற வேண்டி சிறப்பு பிரார்த்தனை நடத்தினார்கள்.
இருக்கன்குடி அம்மனை சமூக இடைவெளி விட்டு மாஸ்க் அணிந்து தரிசனம் செய்து தேமுதிக நிறுவனர் கேப்டன் மற்றும் பொருளாளர் அண்ணியார் உடல் நலம் வேண்டி பிரார்த்தனை செய்தனர்.
ஸ்ரீ அருள்மிகு இருக்கன்குடி மாரியம்மன் பிறந்த இடமான சிறிய கோவிலில் சென்று விருதுநகர் தேமுதிக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நத்தத்துப்பட்டி ராமர் பாண்டியன் எலுமிச்சை மாலை, ரோசாப்பூ மாலை, அம்மன் பிறந்த இடத்திற்கு அணிவித்து தேமுதிக நிறுவனர் கேப்டன் மற்றும் பொருளாளர் அன்னியார் அவர்கள் பூரண உடல் நலம் வேண்டி அம்மனிடம் மனம் உருகி பிரார்த்தனை செய்தனர்.
இந்நிகழ்ச்சியில் சாத்தூர் நகர செயலாளர் அந்தோணி ராஜ், கிழக்கு ஒன்றிய செயலாளர் அக்னி ராஜ், மேற்கு ஒன்றிய செயலாளர் வேல்முருகன், நகர அவைத்தலைவர் ஆரோக்கியராஜ், மாணவரணி செயலாளர் விக்னேஷ் மாரி,ரெங்கராஜ், கண்ணன், கருப்பசாமி, சீதாலட்சுமி சாத்தூர் ஒன்றிய மகளிரணி செயலாளர், கருத்தப்பாண்டி,நவீன், வெம்பக்கோட்டை ஒன்றிய நிர்வாகிகள் பாலு, சாய் காளிராஜன், சீனிவாசன், தங்கப்பாண்டி, மாரி கண்ணன் அருப்புக்கோட்டை நிர்வாகிகள்,நாக பாண்டியன் திருச்சுழி நிர்வாகி, மற்றும் நகர ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Comments