போடிநாயக்கனூர்,
செப்டம்பர் 30
தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் வட்டம், அணைக்கரைப் பட்டி ஊராட்சிக்குட்பட்ட சோலையூர் மலைக்கிராமத்தில் சுமார் 85 க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஒடுக்கப்பட்ட மக்களின் சமூகபிரச்சனைகளுக்காக போராடி சமூக நீதியை நிலை நாட்டிய சீனிவாசராவ் அவர்களின் 59-வது நினைவு நாளில் அகில இந்திய விவசாயக்குழு சார்பில் கொடியேற்றம் நடந்தது.
இந்நிகழ்ச்சியில் அகில இந்திய விவசாய குழு கிளை துவங்கப்பட்டதன் நோக்கம், பழங்குடி மக்களுக்கு கல்வியின் முக்கியத்துவம், விவசாயிகளின் உரிமைகள், மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் சிறக்க மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகளை அரசிற்கு தெரியபத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அகில இந்திய விவசாய மாநில குழு உறுப்பினர் ராஜப்பன் பொதுமக்கள் மத்தியில் எல்லோருக்கும் புரியும் விதமாக எளிய வகையில் எடுத்துரைத்தார். இதில் மூக்கையா, செல்வம் மற்றும் பரமசிவம் ஆகியோர் கலந்து கொண்டு கிளைக்கம்பம் மற்றும் கொடியினை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
Comments
Post a Comment