கொடைக்கானல் வெள்ளக்கவி கிராமத்தில் உதவி ஆட்சியர் ஆய்வு
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே சாலை இல்லாத வெள்ளக்கவி கிராமத்தில் அடிப்படை வசதியான சாலை அமைப்பது தொடர்பாக உதவி ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் தலைமையில் அதிகாரிகள் குழு கிராமத்திற்கு நடந்து சென்று ஆய்வு செய்து விரைவில் சாலை அமைப்பதற்கான வாய்ப்பு எவ்வாறு உள்ளது என்பதை ஆய்வு மேற்கொள்ளபடும் என்றார். உதவி ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் கொடைக்கானலில் பதவியேற்ற நாள் முதல் கொடைக்கானல் பகுதியில் என்ன தேவை என்பதை கண்டறிந்தது நேரடியாக ஆய்வு செய்து வருகிறார் கடினமான பாதைகளில் மலை பகுதிகளில் சென்று ஆய்வு செய்து அதற்க்கு தீர்வு காண்பதில் முக்கிய கவனம் செலுத்தி வருகிறார் தன்னைநாடி வருபவர்களை அன்போடு உபசரித்து குறைகளை கேட்டறிந்தது வருகிறார் திரு சிவகுரு பிரபாகரன் ஆட்சியர் அவர்களுக்கு மக்களிடையே பெரும் பாராட்டை பெற்றுவருகிறார்.