சாத்தூர் நகர் பகுதியில் ரூ.7 கோடி மதிப்பில் நடைபெற்றுவரும் பணிகளை ராஜவர்மன் எம்.எல்.ஏ ஆய்வு செய்தார்
சாத்தூர் செப் 21, விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகர் பகுதியில் நடைபெற்று வரும் மேம்பாட்டு திட்ட பணிகளை ராஜவர்மன் எம்.எல்.ஏ ஆய்வு செய்தார் சாத்தூர் நகராட்சி தற்போதைய செயல்பட்டு வரும் அலுவலகம் பழையகட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. அலுவலகத்ற்கு தேவையான போதிய இடவசதி இல்லாததால் நெருக்கடியில் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
அதனால் சாத்தூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகம் தெற்குப்பகுதி அருகே ரூ.2 கோடி மதிப்பில் அணைத்து வசதிகளுடன் புதிதாக அலுவல கட்டிடம் கட்டபட்டுள்ளகட்டிடத்தையும் . சாத்தூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரே உள்ள மரிய ஊரணியில் ரூ. 1 கோடியே 40 லட்சம் மதிப்பில் நடை பெற்றுவரும் மராமத்து பணிகளையும் ஆய்வு செய்தார்.
மேலகாந்தி நகர் விரிவாக்க பகுதியான நேதாஜி நகரில் ரூ.25 லட்சத்தில் புதிதாக கட்டபட்டு வரும் மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி பணி மற்றும் சாத்தூர் நகராட்சியின் தூய்மை பணியாளர்களுக்கான ரூ 3 கோடி மதிப்பில் 36 குடியிருப்புகளின் கட்டுமான பணியினை சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜாவர்மன் அவர்கள் பார்வையிட்டு பணிகளை தரமாக செய்ய வேண்டும் என ஒப்பந்ததார்களை கேட்டுக் கொண்டார். உடன் சாத்தூர் நகராட்சி ஆணையாளர் ராஜமாணிக்கம்,அதிமுக மாநில அம்மா பேரவை இணைச் செயலாளர் வழக்கறிஞர் சேது ராமானுஜம், நகர செயலாளர் வாசன்,மாவட்ட கவுன்சிலர் சீனியம்மாள் ராஜேந்திரன், மேற்கு ஒன்றிய கழக செயலாளர் தேவ துரை, கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முக கனி, நகர்மன்ற முன்னாள் சேர்மன் கிருஷ்ணன், அம்மா பேரவை நகர செயலாளர் அசோக், மற்றும் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.