மாமல்லபுரம் அருகே பேரூர் கிழக்கு கடற்கரை சாலையில் கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் காயத்துடன் உயிர்தப்பினர்

மாமல்லபுரம், செப்.24-

புதுச்சேரியில் இருந்து மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னை நோக்கி ஒரு கார் சென்று கொண்டிருந்தது. அப்போது செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்ரை சாலையில் உள்ள பேரூர் என்ற இடத்தில் சென்னையில் இருந்து வந்த மற்றொரு கார் திருப்போரூர் செல்வதற்காக பேரூர் வளைவில் திரும்பிய போது திடீரென 2 கார்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஒரு கார் மோதிய வேகத்தில் நிலைதடுமாறி அங்குள்ள பள்ளத்தில் கவிழ்ந்து சேதமடைந்தது. அப்போது அந்த காரில் பயணம் செய்த 5 பேர் அதிர்ஷ்டவசமாக காயத்துடன் உயிர் தப்பினர். பிறகு காயமடைந்த அவர்கள் செங்கல்பட்டு அரசுபொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Comments