வேதாரண்யம் நகரில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 4 வீடுகள் தீ பிடித்து எரிந்ததில் ரூ 4. லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சாம்பலானது


வேதாரண்யம்

நாகை மாவட்டம்
 வேதாரண்யம் நகரம் புறம் கீழசேதுரஸ்தா பகுதியை சேர்ந்தவர்கள் பக்கிரி சாமி(65), சுப்பிரமணியன், விஜயலெட்சுமி (62), சுதாகர். இவர்களது வீடுகள் வரிசையாக உள்ள நிலையில் நேற்று காலை  ஏற்பட்ட திடீர் தீ காற்றின் வேகத்தால் மளமளவென அடுத்த வீடுகளுக்கு பரவியது.
 இந்த விபத்தில் 4 வீடுகளும் எரிந்ததில் வீட்டில் இருந்த ரூ 4. லட்சம் மதிப்பிலான போருள்கள் எரிந்து சாம்பலானது.
 இதுகுறித்த தகவலில் வேதாரண்யம் தீயணைப்பு துறையினர் வந்து மேலும் தீ பரவாமல் அணைத்தனர்..சிறிது நேரம் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது ..
 

Comments