விவசாயத்தை பாதிக்கும் 3 சட்டங்களை எதிர்த்து சட்ட நகல் எரிப்பு மற்றும் சாலை மறியல் போராட்டம்

போடிநாயக்கனூர்,
செப்டம்பர் 25.


தேனி மாவட்டம், போடி நாயக்கனூரில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் விவசாயத்தையும்,விவசாயிகளையும் சீரழிக்கின்ற மூன்று வேளாண் மசோதாக்களை பாராளுமன்றத்தில் நிறைவேற்றி விவசாயிகளுக்கு துரோகம் இழைந்த மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நாடு தழுவிய சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாய திருத்த சட்டங்களை ரத்து செய்ய கோரி நாடு முழுவதும் 251 விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்து கம்பம், போடி, தேனி சின்னமனூர், பாடாயம், பெரியகுளம் பகுதிகளில் தேனி மாவட்டத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் போடியில்  விவசாய திருத்த சட்ட மசோதா இயற்றப்பட்ட நாள் இந்தியாவின் கருப்பு நாள் என்று இடம் பெற்றிருக்கின்றது எனவும் காரணம், இந்தியாவில் விவசாயிகள் அனுபவித்து வரும் இந்திய நாட்டு மக்கள் ,காலம் காலமாக பெற்றிருக்கக் கூடிய அடிப்படை உரிமைகளை, விவசாய உரிமையை இன்றைக்கு அவர்கள் இழக்கக்கூடிய அதிகாரப்பூர்வமான சட்டம் நாடாளுமன்றத்தில், நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இப்படிபட்ட ஒரு சூழ்நிலையில் அனைத்து மக்களவை நாடாளுமன்ற உறுப்பினர்களும், எதிர்கட்சி உறுப்பினர்களும் ஒன்று கூடி முறையே விவாதிக்கப்பட்டு சட்டமாக இயற்ற வேண்டும் அதுதான் காலம் காலமாக இருக்கக் கூடிய நாடாளுமன்ற ஜனநாயகம் ஆகும்.

ஆனால் இந்திய நாட்டில் தற்பொழுது இயற்றப்பட்ட வேளாண் மசோதாக்கள் நாடாளுமன்றத்திலும், ராஜ்ய சபாவிலும் முறையாக விவாதிக்கப்படவில்லை. இந்த சட்டங்கள் நாளொன்றுக்குள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்றால் நாட்டிலே ஜனநாயகம் கேள்விக்குறியாக்கப்பட்டிருக்கிறது என்றும்,

1993 காலகட்டங்களில் மத்தியில் மன்மோகன்சிங் ஆட்சி காலத்தில் விவசாய திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டபோது இந்திய விவசாயிகளின் நலன் கருதி விவசாயிகளின் வாழ்வு, விவசாயம் கேள்விக்குறியாகி விடும் என்று கருதி உடனே வாபஸ் பெறப்பட்டது என்பதை சுட்டி காட்டி தற்போது இயற்றப்பட்ட சட்டத்தினை வாபஸ் பெறக் கோரி விவசாய திருத்த மசோதா சட்ட நகலை எரித்து , சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.மேலும் தொழிலாளர்களின் நலன் கருதி மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்கி 100 நாள் வேலையை 200 நாளாக நீட்டிக்கவும், சம்பளம் 205 லிருந்து குறைந்தபட்சம் 400 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்து சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.  

ஆகையால் காவல் துறையினர் சட்டம் ஒழுங்கு பாதிப்பு நடவடிக்கையாக போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்தனர். இதில் விவசாய சங்க மாநில குழு உறுப்பினர் K. ராஜப்பன் ஆக்ரோஷமாக விவசாயிகள் சார்பாக விவசாய சட்ட மசோதாவை திரும்ப பெறக்கோரி முழக்கமிட்டார் விவசாய சங்க தலைவர் E.மூக்கையா, செயலாளர் பாண்டியன், தாலுகா பொருளாளர் ராமகிருஷ்ணன், சிபிம் செயலாளர் செல்வம், முருகவேல், கல்லையா, ராஜசேகர் மற்றும் பெண்கள் ஆகியோர் இருந்தனர்.

Comments