நாம்தமிழர் கட்சி சார்பில் ஈகைச்சுடர்திலீபன் 33 வது நினைவேந்தல் நிகழ்வு

நாமக்கல் மோகனூர் செப் 27

நாமக்கல் மாவட்டம் மோகனூரில்
உலகின் ஒப்பற்றத் தியாகமாய் ஒரு சொட்டு நீராகாரம்கூட அருந்தாமல் தமிழீழ தாயக விடுதலைக்காக வீரமரணம் அடைந்த ஈகைச்சுடர் அண்ணன் திலீபன் அவர்களது 33-வது நினைவு தினத்தை முன்னிட்டு, 
நாம்தமிழர் கட்சி சார்பில் மோகனூரில் உள்ள
நாமக்கல் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் நினைவேந்தல் நிகழ்வு நேற்று மாலை 6 மணி அளவில் நடைபெற்றது.இந்நிகழ்வில் நாமக்கல் தெற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் தலைவர்  வழக்கறிஞர் செயப்பிரகாஷ்,  பொருளாளர் மனோகரன்,தொகுதி பொறுப்பாளர்கள் தலைவர் இரத்தினம்,செயலாளர் முனைவர்ஆனந்த்,துணை செயலாளர் விவின்,பொருளாளர் சசிகுமார் மற்றும் நாமக்கல் நகர பொறுப்பாளர் தலைவர் குமார், செயளாலர் உலகநாதன், பொருளாளர் பாஸ்கர், நாமக்கல் ஒன்றிய இணைச்செயலாளர் செந்தில்குமார்,தொகுதி இளைஞர் பாசறை செயலாளர் கலைச்செல்வன்,குருதிக்கொடை பாசறை செயலாளர் பிரதீப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Comments