பெரியகுளத்தில் பூர்வீக மக்கள் விடுதலை கட்சிசார்பில் செப்டம்பர் 24 ல் மீண்டும் இரட்டை வாக்குரிமையை சட்டத்தை கொண்டுவரக் கோரி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
பெரியகுளம், செப்.24- தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பூர்வீக மக்கள் விடுதலை கட்சியின் சார்பில் செப்டம்பர் 24ல் மீண்டும் இரட்டை வாக்குரிமை சட்டத்தை கொண்டுவர கோரி தேனி மாவட்ட செயலாளர் கார்த்திக் மற்றும் தென் மண்டல அமைப்புச் செயலாளர் மணிகண்டன் ஆகியோர் தலைமை நடைபெற்றது அப்போது மதுரை சாலையில் இருந்து பேரணியாக சென்று பெரியகுளம் வடகரை அம்பேத்கர் சிலை முன்பு 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக இயற்றிய இரட்டை வாக்குரிமை சட்டத்தை அழிக்கப்பட்டதை கண்டித்தும் மீண்டும் இரட்டை வாக்குரிமை சட்டத்தை மத்திய மாநில அரசுகள் அமல்படுத்த கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் நிகழ்ச்சியில் பூர்வீக மக்கள் விடுதலைக் கட்சியின் நிறுவனத் தலைவர் அம்பேத்கர் பாபு , அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் மாநில பொருளாளர் பிச்சை மற்றும் காமராஜ் ஆகியோர் கலந்துகொண்டு பெரியகுளத்தில் நிறுவப்பட்டுள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக பல்வேறு கண்டன கோஷங்கள் எழுப்பினர் ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment