பெரியகுளம் பி எஸ்.என்எல்.நிறுவனத்திற்கு முன்பு சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா கட்சியின் சார்பில் இந்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திருத்தச்சட்டம் 2020 ரத்து செய்யக் கோரி சட்ட நகல் கிளிக்கும் போராட்டம்


பெரியகுளம், செப். 24- தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் முன்பு இந்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திருத்த சட்டத்தை மசோதா 2020 தை எதிர்த்து விவசாயிகளையும் உரிமத்தையும் மாநில அரசுகளின் உரிமையையும் சீர் குலைக்கும் இந்த சட்டத்தை எதிர்த்தும் தமிழகம் முழுவதும் எஸ்டிபிஐ கட்சி சார்பில் வேளாண் மசோதா சட்ட நகல்களை கிழித்து எரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது 
இந்த ஆர்பாட்டத்திற்கு மாவட்ட பொதுச்செயலாளர் நூறுள் ஹசன் அவர்கள் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தற்போது மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் திருத்தச் சட்ட மசோதா 2020 ரத்து செய்யக்கோரி நகல் கிழிக்கும் போராட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் ஜெயசேக் அப்துல்லா பி ஏ பி எல். நகர தலைவர் பெரியகுளம் ஜாவித் அகமது  தேவதானப்பட்டி நகர தலைவர் தமீம் அன்சாரி. கெங்குவார்பட்டி நகரத்தலைவர் இர்பான் போடி நகரத்தலைவர் லத்தீப் மற்றும தேனி நகர தலைவர் முஹம்மது அன்சாரி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐம்பதிற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு நகல் கிழித்தெறிந்து மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர். 


Comments