பெரியகுளத்தில் வேளாண் திருத்தச்சட்டம் 2020 க்கு ரத்து செய்ய கோரி கழுத்தில் தூக்கு கயிறு மாட்டி சாலை மறியலில் ஈடுபட்ட 30க்கும் மேற்பட்டோர் கைது

பெரியகுளம், செப். 25 - தேனி மாவட்டம் பெரியகுளத்தில்  அனைத்து விவசாயிகள் சங்கங்களின் சார்பில் வேளாண் திருத்தச்சட்டம் 2020 தை வாபஸ் 
வாங்க கோரி  பெரியகுளம் வைகை அணை சாலையிலிருந்து ஏர் கலப்பையில் தூக்குகயிர் மாட்டிகொண்டு பேரணியாக சென்று மூன்றாந்தல் தேனி சாலையில், சாலை  மறியல் ஈடுபட்டனர். இந்த சாலைமறியல் போராட்டத்தில்   மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் அனைத்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பினர் 30  க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். மேலும்  சாலை மறியல் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் முருகன் தலைமை வகித்தார். இதில் இந்திய மாணவர் சங்கம் தேனி மாவட்ட தலைவர் பிரேம்குமார் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் செயலாளர் சௌந்தரபாண்டி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் 
மாவட்டக்குழு உறுப்பினர்கள். ஆர்.கே. ராமர் வெண்மணி முத்துகிருஷ்ணன் நாகராஜன்விடுதலை சிறுத்தை கட்சியின் தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் நாகரத்தினம் தேனி பாராளுமன்ற தொகுதி செயலாளர் இரா தமிழ்வாணன்.நகர செயலாளர் ஜோதிமுருகன் கருத்தையன். CPI தாலுகா குழு உறுப்பினர்.
சுந்தர்ராஜன் உள்ளிட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டு மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக பல்வேறு கண்டன கோஷங்கள் எழுப்பினர்  சாலை மறியலில் ஈடுபட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பினர் காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். 
 

Comments