தந்தை பெரியார் 142 வது பிறந்தநாளை ஒட்டி திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்

திருவள்ளூர் மாவட்டம்

திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், தந்தைபெரியார் அவர்களின் 142-வது பிறந்தநாளை முன்னிட்டு, திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.விஜிராஜேந்திரன் தந்தை பெரியாரின் திருவுருவபடத்திற்கு மாலைஅணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் திருவள்ளூர் நகர செயலாளர் சி.சு.ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் எஸ்.மகாலிங்கம், மோ.ரமேஷ், முன்னாள் நகரமன்ற முன்னாள் தலைவர் பொன்பாண்டியன், ந.பிரசன்ன.குமார் மற்றும் திமுகதோழர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.