போடி நாயக்கனூர்,
செப்டம்பர் 22
தேனி மாவட்டம், போடி நாயக்கனூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பாரத ஸ்டேட் வங்கி அருகில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 17 முதல் 22 வரை போராட்டங்களை நகரின் முக்கிய பகுதிகளில் நடத்தி வருகின்றனர். அதில் முக்கியமான கோரிக்கையாக நீட் தேர்வு, அழுத்தம் காரணமாக தமிழகத்தில் மாணவச் செல்வங்கள் தற்கொலை செய்து கொண்டது மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாநில பாடத்திட்டத்தின் கீழ் பெரும்பாலான மாணவ, மாணவியர்கள் படிக்கும் நிலையில் மத்திய பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு நடத்துவது அநீதியாகும். எனவே நீட் தேர்வு விரும்பாத மாநிலங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும், அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத உள் ஒதுக்கீட்டை இந்த கூட்டத்தொடரில் சட்டமாக இயற்றப்பட வேண்டும்.
கொரோனா வைரஸ் தொற்று நாடு முழுவதும் மிக மோசமான நிலையில் பரவி வருவதால் தமிழக முழுவதும் கோவிட் - 19 ஆல் பாதிக்கப்பட்ட அனைத்து நோயாளி களுக்கும் இலவச மருத்துவம் அளித்திடவும் மற்றும் மத்திய அரசு மருத்துவ மனைகளை நாடு முழுவதும் விரிவுபடுத்தவேண்டும் என்றும்,கொரோனா நோய் கட்டுப் பாடு, சிகிச்சை போன்றவற்றில் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இந்திய பொருளாதாரத்தின் பேரழிவு கோவிட் - 19 தொற்றுக்கு முன்பே, பண மதிப்பிழப்பில் தொடங்கி விட்டது. ஜி எஸ்டி அமலாக்கத்தின் போது மேலும் மோசமாகிவிட்டது. இதன் காரணமாக 2 கோடி இளைஞர்கள் வேலையில்லா நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைவாசி உயர்வு, எரிபொருள் விலை உயர்வு நடுத்தர, ஏழை மக்களின் வாழ்க்கையில் பெரும் பொருளாதார பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆகையால் அனைத்து குடும்பங்களுக்கும் அடுத்த ஆறு மாதத்திற்கு மாதம் 7,500 ரூ. ரொக்கமாக வழங்க வேண்டும் என்றும், தேவைப்படும் ஒவ்வொரு தனி நபருக்கு ஆறு மாதத்திற்கு 10 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்க வேண்டும்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் அரசால் அறிவிக்கப்பட்ட 11 அவசரச் சடங்களையும் திரும்ப பெற வேண்டும் என்றும், அவற்றில் குறிப்பாக இந்திய விவசாயிகளின் வாழ்வையும், விவசாயத்தினையும் அழிக்கின்ற வகையில் இயற்றப்பட்ட சட்டத்தை திரும்ப பெறவும், தேசிய கல்விக் கொள்கை ,தேசிய டிஜிட்டல் சுகாதார திட்டம், அரசு நிறுவனங்களை தனியார் மயமாக்குதல் சட்டங்களை திரும்ப பெறுதல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள்.மாவட்ட பொறுப்பாளர் K. ராஜப்பன், தாலுகா பொறுப்பாளர்கள் தங்கபாண்டி, செல்வம், சந்திர சேகர், மீரா, செல்லத்துரை, முருகவேல், செல்லப்பாண்டி மற்றும் மூக்கையா ஆகியோர் கலந்துகொண்டனர். 10 அம்ச கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுக்கு தெரிவிக்கும் வகையில் மாவட்ட பொறுப்பாளர் ராஜப்பன் பொது மக்கள் மத்தியில் எடுத்துரைத்தார்.
Comments
Post a Comment