வெம்பக்கோட்டை தேமுதிக ஒன்றிய மகளிரணி செயலாளர் R.மும்தாஜ்ராஜா புதுமனை புகுவிழாவில் தேமுதிக நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்
சாத்தூர் ஆகஸ்ட் 25, விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் வெம்பக்கோட்டை ஒன்றிய மகளிரணி செயலாளர் R.மும்தாஜ்ராஜா தாயில்பட்டி கிராமத்தில் 25 ஆண்டு கழித்து சொந்தமாக வீடு வாங்கி "கேப்டன் இல்லம்" என்று புதுமனை புகுவிழா நடத்தினார்.
வெம்பக்கோட்டை மகளிர் அணி செயலாளர் மும்தாஜ் ராஜா தேமுதிகவில் மகளிர் அணியில் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட கூடியவர் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக சார்பாக போட்டியிட்டு தோல்வியுற்றவர். கேப்டன் மீது அதிக மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பதால் மும்தாஜ் ராஜா புதிதாக வாங்கியிருக்கும் வீட்டிற்கு "கேப்டன் இல்லம்" என்று பெயர் வைத்திருப்பதாக தெரிவித்தார்.
வெம்பக்கோட்டை தேமுதிக ஒன்றிய மகளிர் அணி செயலாளர் R.மும்தாஜ்ராஜா புதுமனை புகுவிழாவில் விருதுநகர் தேமுதிக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நத்தத்துப்பட்டி ராமர் பாண்டியன் தலைமையில் விருதுநகர் தேமுதிக மேற்கு மாவட்ட செயலாளர் செய்யது காஜா ஷெரிப், சாத்தூர் நகர செயலாளர் அந்தோணி ராஜ், ஒன்றிய துணை செயலாளர் அக்னி ராஜ், வெம்பக்கோட்டை ஒன்றிய செயலாளர் காளிராஜ், மாவட்ட பிரதிநிதி வேல்ராஜ், வெம்பக்கோட்டை இளைஞரணி விக்னேஷ், திருத்தங்கல் நகர செயலாளர் மற்றும் திருத்தங்கள் நகர துணைச் செயலாளர் தேமுதிக கழக நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் புதுமனை புகுவிழாவில் கலந்துகொண்டு வெம்பக்கோட்டை ஒன்றிய மகளிர் அணி செயலாளர் மும்தாஜ் ராஜா அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
Comments
Post a Comment